COVID அணுகுமுறை மூலம் கனடியர்கள் பிரிப்பதை நிறுத்துங்கள் என Liberal கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமர் Justin Trudeauவிடம் கோரியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பிரதமரின் COVID கொள்கைகளுக்கு எதிராக Quebec மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் Joel Lightbound கருத்து வெளியிட்டார்.
மாகாண அரசாங்கங்களின் தொற்று கொள்கைகள், தொடரும் போராட்டங்களை அரசியல்வாதிகள் கையாளும் முறை ஆகியவற்றுக்கு எதிராக அவர் கருத்து தெரிவித்தார்.
தடுப்பூசி திட்டத்தை எப்போது நீக்குவது என்பதற்கான தெளிவான திட்டத்தை வழங்கவும் அவர் பிரதமரிடம் கோரியுள்ளார்.
தனது கட்சியின் COVID கொள்கை கனடியர்களை பிரிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் Lightbound கூறினார்.
தான் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தின் தொனியும் கொள்கைகளும் கடுமையாக மாறிவிட்டன என அவர் கவலை தெரிவித்தார்.
Liberal கட்சியின் Quebec குழுவின் தலைவர் பதவியில் இருந்து இன்று பிற்பகல் Lightbound விலகினார் என்பது குறிப்பிட்டத்