தேசியம்
செய்திகள்

தலைநகர் போராட்டம் முற்றுகையாக மாறியுள்ளது: Ottawa நகர முதல்வர்

கனடாவின் தலைநகர் Ottawa தொடர்ந்தும் அவசர கால நிலையின் கீழ் உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (06) Ottawa நகருக்கான அவசர கால நிலையை நகர முதல்வர் Jim Watson அறிவித்தார்.

Ottawaவில் தொடரும் எதிர்ப்பு போராட்டம் தலை நகரின் சில பகுதிகளை தொடர்ந்து முடக்கியுள்ளது.

Ottawa நகர முதல்வர் Watson, Ontario முதல்வர் Doug Ford, கனடிய பிரதமர் Justin Trudeau ஆகியோருக்கு திங்களன்று கடிதங்களை அனுப்பினார்.

தொடரும் போராட்டம் Ottawa மத்திய பகுதியின் முற்றுகையாக மாறியுள்ளது என அந்த கடிதத்தில் நகர முதல்வர் Watson குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் போராட்டங்களை கட்டுப்படுத்த மேலதிக உதவிகள் கோருவதாக Ottawa காவல் துறையின் தலைவர் Peter Sloly கூறினார்.

போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 20 குற்றவியல் கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

Related posts

பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

Toronto நகரசபை தேர்தலில் 372 வேட்பாளர்கள் போட்டி

Lankathas Pathmanathan

NATOவில் பின்லாந்து இணைவுக்கு கனடா வாழ்த்து

Lankathas Pathmanathan

Leave a Comment