Ontarioவில் COVID தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவடைகிறது.
திங்கட்கிழமை (07) தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,155 ஆக பதிவானது.
இவர்களில் 486 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 11 இறப்புகள் சுகாதார அதிகாரிகளினால் பதியப்பட்டன.
திங்கட்கிழமை வரை 12 வயதிற்கு மேற்பட்ட Ontario வாசிகளில் 92.1 சதவீதம் பேர் ஒரு தடுப்பூசியையும், 89.5 சதவீதம் பேர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.