சுதந்திர பேரணி என அழைக்கப்படும் எதிர்ப்பு போராட்டம் வரும் வார விடுமுறையில் Torontoவிலும் Quebec நகரத்திலும் நடைபெறவுள்ளது.
Toronto பெரும்பாகம் உட்பட மாகாணத்தின் பிற பகுதிகளில் மேலும் எதிர்ப்பு போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்துள்ளதாக Solicitor General Sylvia Jones வியாழக்கிழமை (03) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
இந்த போராட்டத்திற்கு எதிராக காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என அவர் கூறினார்.
காவல்துறையின் நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடாது என கூறிய Jones, அவர்களுக்கு ஆதரவு வழங்க மாகாண அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த வார இறுதியில் திட்டமிடப்பட்ட போராட்டங்களுக்கு முன்னதாக சமூகங்களை பாதுகாப்பாக வைத்திருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தயாராக இருப்பதாக Ontario அரசாங்கம் கூறியது.
அதேவேளை COVID சுகாதார நடவடிக்கைகளை எதிர்க்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வார இறுதியில் Quebec சட்டமன்றத்திலும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு முன்னதாக Quebec சட்டமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறையினர் வலுப்படுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எந்தவிதமான கலவரத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாது என Quebec முதல்வர் François Legault தெளிவுபடுத்தினார்.
Ottawaவில் எதிர்வரும் வார விடுமுறையும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் Toronto, Quebec போராட்டங்கள் குறித்த அறிவித்தல் வெளியானது.