Ottawaவில் தொடர்ந்து ஐந்தாவது தினமாக தொடரும் பார வண்டி ஓட்டுனர்களின் எதிர்ப்பு போராட்டம் சட்ட விரோதமாகி வருகிறது என பிரதமர் Justin Trudeau புதன்கிழமை (02) கூறினார்.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, Ottawa காவல்துறையுடன் மத்திய அரசாங்கம் இணைந்து செயல்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு Ottawa காவல்துறைக்கு இராணுவ உதவி தேவைப்படலாம் என Ottawa காவல்துறையின் தலைவர் Peter Sloly தெரிவித்தார்.
தலைநகரில் மீதமுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மிகவும் கொந்தளிப்பானவர்கள் என அவர் கூறினார்
ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்வரு
COVID தொற்றுடன் பிணைக்கப்பட்ட பொது சுகாதார ஆணைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு கொள்கை வகுப்பாளர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை வெளியேற மாட்டோம் என புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் எதிர்ப்பாளர்கள் உறுதியளித்துள்ளனர்.
இந்த நிலையில் Ottawaவில் வார விடுமுறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மூவரை காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Ottawaவைச் சேர்ந்த 37 வயதான ஆண், 29 வயதான ஆண், Quebecகைச் சேர்ந்த 48 வயதான ஆண் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிகமாக 13 விசாரணைகள் நடைபெற்று வருவதாக Ottawa காவல்துறை ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.