பார வண்டி ஓட்டுனர்களின் போராட்டம் செவ்வாய்க்கிழமை (01) நான்காவது நாளாக தலைநகர் Ottawaவில் தொடர்கிறது.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு அழைப்புகள் விடுக்கப்படுகின்ற போதிலும், போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர் தமது போராட்டத்தை தொடர உறுதியளித்துள்ளனர்
தொடர் போராட்டத்தினால் பல வணிகங்கள், சில குழந்தை பராமரிப்பு மையங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.
தொடர்ந்து ஐந்தாவது நாளாக நடந்த போராட்டத்தின் காரணமாக குறைந்தது ஒரு தடுப்பூசி மையம் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.
சில குடியிருப்பாளர்கள் முகமூடி அணிந்து செல்லும் போது தாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.