BA.2 எனப்படும் புதிய Omicron துணை திரிபின் 50க்கும் மேற்பட்ட தொற்றுக்களை கண்டறிந்துள்ளதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் கூறுகிறது.
BA.2 துணை திரிபின் 51 தொற்றுக்கள் கனடாவில் பதிவாகியுள்ளதாக கூறும் பொது சுகாதார நிறுவனம், இவை பிரதானமாக சர்வதேச பயணிகளிடம் இருந்து பரவுவதாக உறுதிப்படுத்தியது.
அனைத்து புதிய COVID திரிபுகளை போல் BA.2 துணை திரிபையும் கண்காணித்து வருவதாக பொது சுகாதார நிறுவனம் கூறியது.
பொது சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையை கனடியர்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் எனவும் பொது சுகாதார நிறுவனம் வலியுறுத்துகின்றது.
பொது சுகாதாரம் நடவடிக்கைகளுடன் இணைந்து தடுப்பூசி பெறுவது, COVID தொற்றுப் பரவலைக் குறைக்க முக்கியமானது என்பதை கனடா அரசாங்கம் அறிந்திருக்கிறது எனவும் பொது சுகாதார நிறுவனம் குறிப்பிடுகின்றது.