Mexicoவில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இரண்டு கனேடியர்களுக்கு குற்றவியல் தொடர்புகள் இருந்தன என தெரியவருகிறது.
Mexico உல்லாச விடுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியானவர்கள் ஆண்கள் எனவும் ஒரு பெண் காயமடைந்த நிலையில் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
பாதிக்கப்பட்டவர்களை உள்ளூர் ஊடகங்கள் அடையாளம் கண்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்கள் மூவரும் கனடியர்கள் என உறுதிப்படுத்தியுள்ள கனடாவின் உலகளாவிய விவகாரங்களுக்கான அமைச்சு
தனியுரிமை காரணமாக மேலதிக எந்த தகவலையும் வெளியிட முடியாது என தெரிவித்தது.
கொல்லப்பட்ட இரண்டு கனேடியர்கள் கனேடிய, அமெரிக்க சட்ட அமலாக்கப் பிரிவினரின் குற்றவியல் விசாரணைக்கு உட்பட்டவர்கள் என கூறப்படுகிறது.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபரின் படங்களை மாநில பாதுகாப்பு செயலாளர் வெளியிட்டார்.