தேசியம்
செய்திகள்

Ontarioவிலும் Quebecகிலும் அதிக அளவில் பனிப்பொழிவு

Ontarioவிலும் Quebecகின் சில பகுதிகளிலும் திங்கட்கிழமை (17) அதிக அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இரண்டு மாகாணங்களின் பல பகுதிகளிலும் 5 முதல் 60 centimeters வரையிலான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

Ontario ஏரியின் அருகில் உள்ள இடங்களில் 60 centimeters வரை பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக காற்று காரணமாக திங்கள் காலை தெற்கு Ontarioவின் பெரும்பகுதி முழுவதும் சுற்றுச்சூழல் கனடாவினால் பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

திங்கள் பிற்பகல் நிலைமைகள் மேம்படத் தொடங்கிய போதிலும் பெரும்பாலான பகுதிகளில் பனிப்பொழிவு எச்சரிக்கை தொடர்ந்து அமுலில் உள்ளது.

திங்கள் பனிப்புயல் காரணமாக Torontoவில் உள்ள Gardiner Expressway, Don Valley Parkway ஆகிய நெடுந்தெருக்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

Montrealலுக்கு தெற்கே, நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன.

திங்களன்று தெற்கு Ontario கல்வி வாரியங்களில் பல பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.

கனடா Post தனது சேவைகளையும் நிறுத்தியது.

Toronto, Durham, Peel, York, Ottawa ஆகிய இடங்களில் உள்ள தடுப்பூசி மையங்கள் செவ்வாய்கிழமை வரை மூடப்பட்டன.

Related posts

Manitoba முன்னாள் முதல்வரின் தொகுதியில் NDP வெற்றி!

Lankathas Pathmanathan

கனேடிய வங்கி முக்கிய வட்டி விகிதத்தில் மாற்றம் எதனையும் மேற்கொள்ளவில்லை!

Gaya Raja

இலங்கை குடும்பத்தை படுகொலை செய்த சந்தேக நபர் நீதிமன்றில்

Lankathas Pathmanathan

Leave a Comment