Brampton நகரில் வசிக்கும் மனோகரன் பொன்னுத்துரை என்ற தமிழர் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் 70 மில்லியன் டொலர்களை வெற்றி பெற்றுள்ளார்.
December 17, 2021 அதிஷ்டம் பார்க்கப்பட்ட Lotto Max அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் இந்த வெற்றியை அவர் பெற்றுள்ளார்.
54 வயதான குடும்பஸ்தரான மனோகரன் பொன்னுத்துரை, பெரிய வெற்றி பெற வேண்டும் என்ற தனது தந்தையின் கனவுகளால் ஈர்க்கப்பட்டு 30 ஆண்டுகளாக அதிஷ்ட இலாப சீட்டு களை கொள்வனது செய்துவருவதாக தெரிவித்தார்.
சிறு உற்பத்தி நிறுவன உரிமையாளர் மனோகரன் பொன்னுத்துரை, ஓய்வு பெறத் தயாராக இல்லை என வலியுறுத்துகிறார்.
தன்னை நம்பி பணிபுரியும் ஊழியர்களை தான் கைவிடமாட்டேன் எனவும் அவர் கூறினார்.