தேசியம்
செய்திகள்

கனடிய தமிழர்களின் பங்களிப்பை அங்கீகரித்துக் கொண்டாடும் காலம் இது: பொங்கல் செய்தியில் பிரதமர் Trudeau

கனடாவிலும் உலகெங்கிலும் தைப்பொங்கல் கொண்டாடும் அனைவருக்கும் இந்தப் பண்டிகை மகிழ்ச்சியானதாக அமைவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

தைப்பொங்கலை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டார்.

தமிழ்க் கனடியர்கள் இந்த நாட்டின் சமூக, பொருளாதார , பண்பாட்டு துறைகளில் வழங்கியதும், தொடர்ந்து வழங்குவதுமான பெருமளவிலான பங்களிப்பை அங்கீகரித்துக் கொண்டாடும் காலமாக இது அமைகிறது என Trudeau தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

கனடாவில் January மாதம் தமிழ் மரபுரிமை திங்களாக விளங்குகின்றது.

கனடாவின் துடிப்பான தமிழ் சமூகத்தை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம் என பிரதான எதிர்க்கட்சியான Conservative கட்சியின் தலைவர் Erin O’Toole தனது வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம் மொழி ஆகியவற்றைக் கொண்டாடுவதற்கும், நாடு முழுவதும் உள்ள சமூகங்களில் தமிழ் கனடியர்களின் முக்கிய பங்களிப்பை அங்கீகரிப்பதற்கும் ஒரு வாய்ப்பாக இந்த பொங்கல் அமைந்துள்ளது என கனடிய NDP தலைவர் Jagmeet Singh தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டார்.

தமிழரான அமைச்சர் அனிதா அனந்த், நாடாளுமன்ற செயலாளரான கரி அனந்தசங்கரி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் வாழ்த்து செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

Related posts

சுதந்திரத் தொடரணியை முடிவுக்குக் கொண்டுவர அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தியது குறித்த விசாரணை

Lankathas Pathmanathan

இரண்டு மாதத்திற்குள் கனடா திரும்பிய இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் COVID தொற்றால் பாதிப்பு!

Gaya Raja

Conservative கட்சியின் ,மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் Diane Finley இராஜினாமா!

Gaya Raja

Leave a Comment