அதிகரித்து வரும் COVID தொற்றாளர்களின் அனுமதி, பணியாளர்கள் பற்றாக்குறை ஆகியன கனேடிய மருத்துவமனைகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
இதன் எதிரொலியாக Ontario மாகாண வைத்தியசாலைகள் அவசரமற்ற அறுவை சிகிச்சைகளை இடைநிறுத்துகிறது.
அதிக ஆபத்தற்றவர்களுக்கு PCR சோதனைகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவதாக செவ்வாய்க்கிழமை (04) Quebec அரசாங்கம் அறிவித்தது.
அதேவேளை ஐந்தாவது அலைக்கு மத்தியில் Quebecகில் செவிலியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன
Quebec முழுவதும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் நோய்வாய்ப்பட்டவர்களாகவோ அல்லது தனிமைப்படுத்தப்பட்டவர்களாகவோ உள்ளனர்.