February 21, 2025
தேசியம்
செய்திகள்

Quebec மாகாணம் மீண்டும் அறிமுகப்படுத்தும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு

COVID தொற்றின் விகிதங்கள் அதிகரித்து வருவதால் Quebec மாகாணம் இரவு 10 மணி ஊரடங்கு உத்தரவை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது.

வெள்ளிக்கிழமை (31) முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவை Quebec மாகாணம் அமுல்படுத்துகின்றது.

முதல்வர் François Legault, சுகாதார அமைச்சர் Christian Dube, பொது சுகாதார இயக்குனர் வைத்தியர் Horacio Arruda ஆகியோர் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

வரவிருக்கும் வாரங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மாகாணத்தின் திறனை மீறும் அபாயம் உள்ளதாக முதல்வர் கூறினார்.

இது அனைவருக்கும் சிகிச்சை அளிக்க முடியாத நிலைக்கு வழிவகுக்கும் என அவர் தெரிவித்தார்.

உணவகங்களில் இருந்து உண்வு உண்பது தடைசெய்யப்படும் எனவும் தனிப்பட்ட கூட்டங்கள் குடும்ப உறுப்பினர்களுக்குள் மட்டுப்படுத்தப்படும் எனவும் இன்று அறிவிக்கப்பட்டது.

வழிபாட்டுத் தலங்கள் மூடப்படும் எனவும் 25 பேர் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ளலாம் எனவும் இன்று  அறிவிக்கப்பட்டது.

உட்புற விளையாட்டுகள் முற்றிலும் இரத்து செய்யப்படுகின்றன.

Convenience store, எரிவாயு நிலையங்கள், மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும், அடுத்த மூன்று வாரங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படும்.

பல்கலைக்கழகங்களுக்கும்  பொது நிதியுதவி பெறும்  கல்லூரிகளுக்கும் January 17 வரை விடுமுறை நீட்டிக்கப்படும்.

Related posts

Stanley Cup: இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெறுமா Toronto Maple Leafs?

Lankathas Pathmanathan

ஆரம்பமானது Quebec சட்டமன்றத்தின் 43வது அமர்வு

Lankathas Pathmanathan

பணி நீக்கம் செய்யப்படும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள Canada Post தொழிலாளர்கள்?

Lankathas Pathmanathan

Leave a Comment