கனடாவில் வேலை வெற்றிடங்கள் 2021ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் முன்னெப்போதும் இல்லாத உயர்வை எட்டியது.
சுகாதாரம் , உணவு, சில்லறை வணிகம் போன்ற சில துறைகளில் இந்த உயர்வு எட்டப்பட்டதாக புள்ளிவிபரத் திணைக்களத்தின் சமீபத்திய அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
2019 ஆம் ஆண்டின் இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில், அனைத்து துறைகளிலும் உள்ள வேலை வெற்றிடங்களின் எண்ணிக்கை 62.1 சதவீதம் அதிகமாகும்.
அனைத்து மாகாணங்களிலும் வெற்றிடங்கள் அதிகரித்துள்ளன.
Saskatchewan, Quebec, Ontario ஆகிய மாகாணங்களில் மிகப்பெரிய அதிகரிப்புகள் பதிவாகின.
Nova Scotia வெற்றிடங்களில் மிகச்சிறிய அதிகரிப்பைக் கொண்டுள்ளது.