கனடா 1 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கான COVID தடுப்பூசிகளை பெற்றுள்ளது.
கொள்முதல் அமைச்சர் Filomena Tassi ஒரு அறிக்கையில் இந்த தகவலை வெளியிட்டார்.
குழந்தைகளுக்கான 1.136 மில்லியன் Pfizer தடுப்பூசிகள் திங்கட்கிழமை (20) கனடாவை வந்தடைந்ததாக அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
இதன் மூலம் கனடாவில் ஐந்து முதல் 11 வயது வரையிலான குழந்தைகள் தகுதி பெற்றவுடன் அவர்களின் இரண்டாவது தடுப்பூசியைப் பெற முடியும் என அந்த அறிக்கை கூறுகிறது.
இந்த நிலையில் முடிந்தவரை விரைவாக தடுப்பூசிகளை விநியோகிக்க மாகாணங்களுடன் நெருக்கமாக செயற்படவுள்ளதாக அரசாங்கம் கூறியது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், கனடா 2.9 மில்லியன் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளைப் பெற்றது.
இது கனடாவில் உள்ள தகுதியுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் தடுப்பூசியை வழங்குவதற்கு போதுமானது என அரசாங்கம் கூறியது.