நாடாளுமன்ற அமர்வுகளில் நேரடியாக கலந்து கொள்ளும் Liberal கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை மத்திய அரசு பெருமளவு குறைத்து வருகிறது.
COVID தொற்றின் Omicron திரிபின் பரவல் காரணமாக இந்த நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்கின்றது.
புதன்கிழமை (15) நடைபெறவுள்ள Liberal கட்சியின் அனைத்து பிராந்திய மற்றும் தேசிய உறுப்பினர்களின் கூட்டங்களும் மெய்நிகர் ஊடக நடைபெறும் என அரசாங்க அவைத் தலைவர் Mark Holland கூறினார்.
சபையில் அதன் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் ஆளும் கட்சியின் முடிவு குறித்து தனது எதிர்க்கட்சி சகாக்களுக்கு தெரிவித்ததாக அவர் கூறினார்.
ஆனால் அதைப் பின்பற்றலாம் என்பதை ஏனைய கட்சிகள் தீர்மானிக்கும் எனவும் Holland தெரிவித்தார்.