தேசியம்
செய்திகள்

கனடாவில் COVID தொற்றின் மரணம் 30 ஆயிரத்தை அண்மிக்கிறது

கனடாவில் வியாழக்கிழமை மொத்தம் 2,868 புதிய COVID தொற்றுக்கள் பதிவாகின.

Quebecகில் தொடர்ந்தும் தொற்றுக்களில் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.

வியாழக்கிழமை 902 புதிய தொற்றுகளும் 5 மரணங்களும் Quebecகில் பதிவாகின.

Ontarioவிலும் நாளாந்த தொற்றுக்கள் அதிகரிக்கின்றது.

வியாழக்கிழமை 748 புதிய தொற்றுகளும் 4 மரணங்களும் Ontarioவில் பதிவாகின.

ஏழு நாட்களுக்கான தொற்றுக்களில் சராசரி Ontarioவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Ontarioவில் கடந்த வாரம் 597ஆக இருந்த சாராசரி தொற்றின் எண்ணிக்கை வியாழக்கிழமை 692 ஆக அதிகரித்து.

British Columbiaவில் 424 புதிய தொற்றுக்களும் 3 மரணங்களும் வியாழக்கிழமை பதிவாகின

Albertaவில் 379 தொற்றுக்களும் ஒரு மரணமும் வியாழக்கிழமைபதிவானது.

Manitobaவில் 183 புதிய தொற்றுகளும் 5 மரணங்களும் பதிவாகின.

ஏனைய மாகாணங்களில் தலா 100க்கும் குறைவான தொற்றுக்கள் பதிவாகின.

கனடாவில் இதுவரை COVID தொற்று காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை அண்மிக்கின்றது.

Related posts

Nova Scotia காடுகளில் பயணம் செய்வதற்கு தடை

Lankathas Pathmanathan

இங்கிலாந்து வங்கியின் முன்னாள் ஆளுநரை அரசியலுக்கு அழைத்து வரும் முயற்சியில் பிரதமர்?

Lankathas Pathmanathan

குறைவடைந்து வரும் ஏழு நாள் சராசரியான தொற்றின் எண்ணிக்கை!

Gaya Raja

Leave a Comment