February 22, 2025
தேசியம்
செய்திகள்

கனடாவில் முதற்குடியின ஆளுநர் நாயகம் வாசித்த முதலாவது சிம்மாசன உரை

தேர்தல் பிரச்சாரத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிவர்த்தி செய்வதாக சிம்மாசன உரையில் பிரதமர் Justin Trudeau உறுதியளித்தார்.

செவ்வாய்க்கிழமை சிம்மாசன உரை, எதிர்காலப் பொருளாதாரத்துடன் COVID  மறு கட்டமைப்பிற்கான பார்வையை முன்வைக்கிறது.

44வது நாடாளுமன்றத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் சிம்மாசன உரை செவ்வாய்க்கிழமை கனடிய மேல் சபையில் நிகழ்ந்தது.

Liberal கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை போலவே, தொற்றுக்கு பிந்தைய பொருளாதார மற்றும் சுகாதார மீட்சியில் பில்லியன் டொலர்களை முதலிடுவவதன் மூலம் கனடாவை COVID நெருக்கடியிலிருந்து வெளியேற்றுவதற்கான Trudeauவின் திட்டங்களை இந்த உரை கோடிட்டுக் காட்டுகிறது.

ஆளுநர் நாயகம் Mary Simon பிரதமர் Trudeau அரசாங்கத்தின் சிம்மாசன உரையை நிகழ்த்தினார்.

COVID தொற்றை கடந்து செல்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அவர்கள் விரும்புவது மட்டுமல்லாமல், நாம் எதிர்கொள்ளும் பிற சவால்களைச் சந்திக்க தைரியமான, உறுதியான தீர்வுகளையும் அவர்கள் விரும்புகிறார்கள் என சிம்மாசன உரையில் அவர் குறிப்பிட்டார்.

ஆளுநர் நாயகம் ஆங்கிலம், பிரஞ்சு, இனுக்டிடூட் ஆகிய மூன்று மொழிகளில் உரை நிகழ்த்தினார்.

கனடாவில் முதற்குடியின ஆளுநர் நாயகம் சிம்மாசன உரையை வாசிப்பது இதுவே முதல் தடவையாகும்.

சிம்மாசன உரை குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்.

இந்த சிம்மாசன உரை வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு முன்னர்  ஆறு நாட்கள் வரை விவாதம் நிகழவுள்ளது.

இந்த அரசாங்கம் எதிர்கொள்ளும் முதல் நம்பிக்கை வாக்கெடுப்பாக இந்த சிம்மாசன உரை மீதான வாக்கெடுப்பு அமையும்.

தனது கட்சி இந்த சிம்மாசன உரைக்கு எதிராக வாக்களிக்கும் என Conservative கட்சி தலைவர் Erin O’Toole தெரிவித்தார்.

அதேவேளை இந்த சிம்மாசன உரைக்கு எதிராக  வாக்களிக்க தயாராக உள்ளதாக NDP Leader தலைவர் Jagmeet Singh தெரிவித்துள்ளார்.

இருப்பினும், Bloc Quebecois கட்சியின் ஆதரவுடன் அரசாங்கம் இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

B.C. வெடிப்பு சம்பவத்தில் மூவர் காயம்!

Lankathas Pathmanathan

சட்டவிரோத மருந்துகளால் பலியாகும் முதற்குடியினர் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

கனடாவின் கவனம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவினால் மாற்றமடையாது – அமெரிக்காவிற்கான கனடியத் தூதர் Kirsten Hillman

Lankathas Pathmanathan

Leave a Comment