December 12, 2024
தேசியம்
செய்திகள்

குழந்தைகளுக்கான COVID தடுப்பூசியின் முதல் தொகுதி கனடாவை வந்தடைந்தது!

குழந்தைகளுக்கான COVID தடுப்பூசியின் முதல் ஏற்றுமதியை கனடா பெற்றது.

குழந்தைகளுக்கான COVID தடுப்பூசியின் முதல் தொகுதி ஞாயிற்றுக்கிழமை கனடாவில் தரையிறங்கியது.

5 வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கான Pfizer தடுப்பூசிக்கு Health கனடா வெள்ளிக்கிழமை அங்கீகாரம் வழங்கிய நிலையில் முதல் ஏற்றுமதி தடுப்பூசியை கனடா பெற்றது.

தடுப்பூசிகளுடன் விமானம் Hamilton விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை தரையிறங்கியது.

மத்திய கொள்முதல் அமைச்சர் Filomena Tassi இந்த விமானத்தை வரவேற்றார்.

இந்த நிலையில் நோய்த்தடுப்பின் அடுத்த கட்டத்தை ஆரம்பிக்கத் தயாராக இருப்பதாக மாகாணங்களை பிராந்தியங்களும் கூறுகின்றன.

இந்த வயதினருக்குப் பயன்படுத்த கனடாவில் அங்கீகரிக்கப்பட்ட முதல் COVID தடுப்பூசி இதுவாகும்.

கனடாவில் உள்ள அனைத்து 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் தேவையான 2.9 மில்லியன் தடுப்புசிகளும் அடுத்த வார இறுதியில் மொத்தமாக கனடாவை வந்தடையும் எனவும் கூறப்படுகிறது

தகுதியான அனைத்து குழந்தைகளுக்கும் முதல் தடுப்பூசிகை வழங்க இது போதுமான அளவு என அமைச்சர் Tassi தெரிவித்திருந்தார்.

Health கனடா இரண்டு தடுப்பூசிகளையும் 21 நாட்கள் இடைவெளியில் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

ஆனாலும் நோய்த் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசிகளுக்கு இடையே எட்டு வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட இடைவெளியை பரிந்துரைக்கிறது.

Related posts

புதிய தொழில் அமைச்சர் பதவி ஏற்பு

Lankathas Pathmanathan

இலங்கை: சீரழிந்து வரும் பொருளாதாரம் – உள்நாட்டு அமைதியின்மை குறித்து கனடா கவலை

வேலையற்றோர் விகிதம் கடந்த மாதம் குறிப்பிடத்தக்க மைல்கல்லை கடந்தது

Lankathas Pathmanathan

Leave a Comment