Ontarioவில் தொடர்ந்து நான்காவது நாளாக 700க்கும் மேற்பட்ட புதிய COVID தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமையன்று 741 புதிய தொற்றுக்களையும் மூன்று மரணங்களையும் உறுதிப்படுத்தினர்.
Ontarioவில் சனிக்கிழமை 728, வெள்ளிக்கிழமை 793, வியாழக்கிழமை 711 என புதிய தொற்றுக்களை பதிவு செய்தனர்.
இந்த நிலையில் Ontarioவில் நாளாந்த தொற்றின் ஏழு நாள் சராசரி தொடர்ந்தும் அதிகரிக்கிறது.
Ontarioவில் நாளாந்த தொற்றின் ஏழு நாள் சராசரி இப்போது 645 ஆக அதிகரித்துள்ளது.
இது கடந்த வாரத்தில் 573 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
11.2 மில்லியனுக்கும் அதிகமானவர்கள், அல்லது தகுதியுள்ள மக்கள் தொகையில் சுமார் 86 சதவீதம் பேர், இரண்டு COVID தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.