தேசியம்
செய்திகள்

குளிர் காலத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது: சுகாதார அமைச்சர் Christine Elliott 

மீண்டும் திறக்கும் திட்டங்களை Ontario மாற்றாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ontarioவில் COVID தொற்று எண்ணிக்கையில் அதிகரிப்பு அறிவிக்கப்படுகின்ற நிலையில் இந்த தகவலை சுகாதார அமைச்சர் Christine Elliott வெளியிட்டார்.

குளிர் காலத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டதாகவும் சுகாதார அமைச்சர் கூறினார்.

இது மாகாணத்தின் திட்டங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்

கட்டுப்பாடுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டால், அது பிராந்திய வாரியாக இருக்கும் என கூறிய அமைச்சர் Elliott, அவை பெரும்பாலும் உள்ளூர் சுகாதார மருத்துவ அதிகாரிகளால் வழிநடத்தப்படும் எனவும் தெரிவித்தார்

செவ்வாய்கிழமை Ontarioவில் 441 புதிய தொற்றுக்கள் பதிவாகின.

இதன் மூலம் செவ்வாயன்று Ontarioவில் நாளாந்த தொற்றின் ஏழு நாள் சராசரி இப்போது 492 ஆக உள்ளது.

இது கடந்த வாரத்தில் 371 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

திங்கட்கிழமையுடன் Ontarioவில் 85 சதவீதமான தகுதியானவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆரம்பமானது Quebec சட்டமன்றத்தின் 43வது அமர்வு

Lankathas Pathmanathan

கல்வி முறையை நவீனமயமாக்கும் Ontarioவின் புதிய சட்டமூலம்

முதற்குடியினரை கௌரவிக்கும் அணுகு முறைகளுடன் கனடா தின கொண்டாட்டங்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment