கனேடிய எல்லையில் PCR சோதனை தேவைகள் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும்: தலைமை பொது சுகாதார அதிகாரி கருத்து வெளியிட்டுள்ளார் .
கனடிய அமெரிக்க எல்லையில் PCR சோதனை தேவைகள் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam இந்த கருத்தை தெரிவித்தார்.
கனேடிய எல்லையில் COVID தொற்றுக்குக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான PCR சோதனை தேவைகள் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என அவர் கூறினார்.
குறிப்பாக குறுகிய பயணங்களுக்காக வெளிநாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு PCR சோதனைத் தேவைகள் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என Tam தெரிவித்தார்.
கனேடிய எல்லை சேவைகள் நிறுவனம் கனடாவிற்குள் நுழையும் தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான சோதனைத் தேவைகளை மீண்டும் வலியுறுத்தியது.
அமெரிக்காவுடனான எல்லை அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்படவுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது