February 21, 2025
தேசியம்
செய்திகள்

முதலாவது  சர்வதேச பயணத்தை ஆரம்பித்துள்ள ஆளுநர் நாயகம்! 

ஆளுநர் நாயகம் Mary Simon நேற்று தனது முதலாவது  சர்வதேச பயணத்தை  ஆரம்பித்துள்ளார்.

ஆளுநர் நாயகமாக தனது முதலாவது சர்வதேச பயணத்தில் Simon ஜெர்மனி சென்றடைந்தார்.

அங்கு உலகின் மிகப்பெரிய வர்த்தக புத்தக கண்காட்சியில் ஆளுநர் நாயகம் கலந்து கொள்ளவுள்ளார்

கடந்த July மாதம் கனடாவின் 30வது ஆளுநர் நாயகமாக பொறுப்பேற்ற Simon வியாழக்கிழமை வரை Berlin, Frankfurt ஆகிய இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அதேவேளை 2021 Frankfurt புத்தகக் கண்காட்சியில் அவர் கனடாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்.

இந்தப் புத்தகக் கண்காட்சியில் கனடா இந்த ஆண்டு கௌரவ விருந்தினராக கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

இந்த நான்கு நாள் அரசு முறைப் பயணத்தின் போது Simon ஜெர்மன் ஜனாதிபதி Frank-Walter Steinmeier, அதிபர் Angela Merkel ஆகியோரை சந்திப்பார்.

Related posts

Hockey கனடாவுக்கு நிதியுதவியை நிறுத்த பெரு நிறுவனங்கள் முடிவு

Lankathas Pathmanathan

பதவி விலகப் போவதில்லை: David Johnston

Lankathas Pathmanathan

பணவீக்கம் 30 ஆண்டுகளில் இல்லாத உயர்வு

Lankathas Pathmanathan

Leave a Comment