அமெரிக்கா தனது எல்லையை தடுப்பூசி பெற்ற கனேடியர்களுக்கு மீண்டும் திறக்கும் என்ற செய்தி வெளியான நிலையில், கனேடிய அரசு மீண்டும் நாட்டுக்குள் நுழைவதற்கான தனது COVID சோதனை தேவையை இரத்து செய்ய கோரிக்கைகள் வலுத்துள்ளது.
இந்த விடயம் குறித்து தற்போது Washington, D.C.யில் உள்ள துணைப் பிரதமர் Freeland இடம் கேள்வி எழுப்பப்பட்டது.
கனடியர்கள் மீண்டும் கனடாவுக்குள் நுழைய உகந்த PCR சோதனை தேவை என Freeland இதற்கு பதிலளித்தார்
COVID தொற்றுக்கு எதிரான நடவடிக்கையாக பொது சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளைப் பின்பற்றுவது தொடர்ந்தும் கனடாவின் அணுகுமுறையாக இருக்கும் என Freeland தெரிவித்தார்
அதேவேளை COVID சோதனைத் தேவைகள் உட்பட தற்போதைய நடவடிக்கைகள் அனைத்தும் தொடர்ந்தும் அமலில் இருக்கும் என வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், கனடா எல்லை சேவைகள் நிறுவனம் கனேடியர்களுக்கு நினைவூட்டியது.