தேசியம்
செய்திகள்

Ontario பாடசாலைகளில் இலக்கு வைக்கப்படும் விரைவு சோதனை திட்டம் அறிமுகம்!

Ontario பாடசாலைகளில் இலக்கு வைக்கப்படும் COVID விரைவு சோதனை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Ontarioவின் தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் Kieran Moore பாடசாலைகளிலும் உரிமம் பெற்ற குழந்தை பராமரிப்பு நிலையங்களிலும் புதிய இலக்கு வைக்கப்படும் சோதனை திட்டத்தை அறிவித்தார்.

திங்கட்கிழமை வரையான புள்ளிவிவரங்களில் மாகாணத்தில் உள்ள 4,844 பாடசாலைகளில் 816 பாடசாலைகளில் குறைந்தது ஒரு தொற்று பதிவாகியுள்ளது.

தொற்றின் பரவல் காரணமாக ஐந்து பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

Ontarioவில் 12 முதல் 17 வயதிற்குட்பட்டவர்களில் 81 சதவீதத்துக்கும் அதிகமானோர் முதலாவது தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என மாகாண தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை 73 சதவிகிதமானவர்கள் இரண்டாவது தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

12 வயதுக்கு மேற்பட்டவர்களில் 86 சதவீதமானவர்கள் Ontarioவில் குறைந்தது ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

81 சதவீதமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளதாக Ontario மாகாண சுகாதார அமைச்சர் Christine Elliott செவ்வாய்கிழமை கூறினார்.

Related posts

இறுதி அறிக்கையை வெளியிட்டார் David Johnston

Lankathas Pathmanathan

Nova Scotia வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு குழந்தைகளின் உடல் மீட்பு

Lankathas Pathmanathan

தொடர்ந்து அதிகரிக்கும் Ontarioவின் தொற்று எண்ணிக்கை!

Gaya Raja

Leave a Comment