தேசியம்
செய்திகள்

பசுமைக் கட்சியின் தலைவி தலைமை பதவியில் இருந்து விலகல்!

பசுமைக் கட்சியின் தலைமை பதவியில் இருந்து விலகுகிறார்.

பசுமை கட்சி தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக Annamie Paul திங்கட்கிழமை காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.

தலைமை பதவியில் இருந்து விலகுவதற்கான செயல்முறையை ஆரம்பிப்பதாகவும் கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலின் பின்னர் கட்சி தனது தலைமையை மறுஆய்வு செய்ய ஆரம்பித்த நிலையில் பதவி விலகுவதற்கான முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .நடைபெற்ற தேர்தலில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகவில்லை.

அத்துடன் நாடாளுமன்றத்தில் பசுமைக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அவர் தவறினார்.

கட்சியின் தலைமையில் இருந்த ஒரு வருடத்திற்கு குறைவான காலத்தை தனது வாழ்வின் மோசமான காலம் என செய்தியாளர் சந்திப்பில் Paul வர்ணித்தார்.

Related posts

வார இறுதியில் நடைபெறும் Ontario Liberal கட்சியின் வருடாந்த பொதுக்கூட்டம்

Lankathas Pathmanathan

COPA அமெரிக்கா: மூன்றாவது இடத்துக்கான போட்டியில் கனடா தோல்வி

Lankathas Pathmanathan

அதிகரித்தது வேலையற்றோர் விகிதம்!

Lankathas Pathmanathan

Leave a Comment