Albertaவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத நிலையை எட்டியுள்ளது.
திங்கள் மாலையுடன் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை 256ஆக அதிகரித்துள்ளது.
COVID தொற்றின் ஆரம்பத்தில் இருந்து இது மிக உயர்ந்த நிலையாகும். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள 79 சதவீத நோயாளிகளுக்கு தடுப்பூசி போடப்படவில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
Albertaவில் திங்கட்கிழமை 1,585 புதிய தொற்றுக்களும் 18 மரணங்களும் பதிவாகின.