கனடாவுக்கான பயணத்தை இரத்து செய்யுமாறு அமெரிக்க குடிமக்களுக்கு திங்கட்கிழமை அறிவுறுத்தியது ஒரு தவறுதலான எச்சரிக்கை என செவ்வாய்க்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை தெளிவுபடுத்தியது.
இந்த நிலையில் திருத்தப்பட்ட பயண ஆலோசனை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியது.
அமெரிக்கர்கள் கனடாவுக்கு செல்லும் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறப்பட்டாலும் முழுவதுமாக பயணத்தை இரத்து செய்யும்படி அவர்கள் வலியுறுத்தப்படவில்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது
கனடாவில் அதிகரித்து வரும் COVID தொற்றுகளுக்கு மத்தியில் கனடாவுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அதன் குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்துகிறது.