September 11, 2024
தேசியம்
செய்திகள்

கனடாவுடன் தொடர்புடைய 1,250 பேர் ஆப்கானிஸ்தானில் கைவிடப்பட்டுள்ளனர்!

கனடாவுடன் தொடர்புள்ள ஆயிரக்கணக்கானவர்கள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில் தொடர்ந்தும் சிக்கியுள்ளதாக தெரியவருகிறது.

சுமார் 1,250 கனேடிய குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தானில் கைவிடப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

கனடாவின் வெளிவிவகார அமைச்சர் Marc Garneau செவ்வாய்க்கிழமை இந்த தகவலை வெளியிட்டார்.

அமெரிக்கா மற்றும் பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதால், எஞ்சியவர்களின் தலைவிதி நிச்சயமற்றதாக உள்ளது.

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்தும் சிக்கியுள்ளவர்களின் வெளியேற்றத்தை எளிதாக்க பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை அண்டிய பிற நாடுகளின் உதவியை கனடா நாடுவதாக அமைச்சர் Garneau கூறினார்.

அதேவேளை அமெரிக்காவால் வெளியேற்றப்பட்ட 5,000 ஆப்கானியர்களை மீளக்குடியமர்த்தும் திட்டத்தை கனடிய மத்திய அரசு அறிவித்துள்ளது.

Related posts

இலங்கையின் நிலைமையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முறையிட கனேடிய அரசாங்கத்திடம் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Londonனில் வெறுப்புணர்வை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வமத நடை பவனி

Gaya Raja

Conservative கட்சியில் இருந்து விலகும் Quebec நாடாளுமன்ற உறுப்பினர்

Lankathas Pathmanathan

Leave a Comment