தேசியம்
செய்திகள்

கனடாவில் நாளாந்தம் 3,000க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள் பதிவு!

கனடா இப்போது COVID தொற்றின் நான்காவது அலையின் பிடியில் உள்ளது.

இது தொற்றின் கடந்தகால அதிகரிப்புகளை விட வியக்கத்தகுந்ததாக இருக்கலாம் என தரவுகள் தெரிவிக்கிறது.

மாகாணங்களும் பிரதேசங்களும் இப்போது நாளாந்தம் 3,000க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்களை பதிவு செய்கிறது.

இது கோடை கால தொற்றுக்களின் எண்ணிக்கையில் இருந்து அதிகரிப்பதாகும்.

இந்த ஆண்டு May மாதம் 24ஆம் திகதிக்கு பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை அதிக நாளாந்த அதிகரிப்பாக 3,755 புதிய தொற்றுக்களை பதிவு செய்தது.

வெள்ளிக்கிழமை தொற்றுக்களின் எண்ணிக்கை புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் பதிவானதை விட அதிகமாக இருந்தது. இறுதியாக மூன்று தினங்கள் அதிகரித்த தொற்றுக்களின் எண்ணிக்கை May மாதத்தின் 24ஆம் திகதி வாரத்தில் பதிவாகி இருந்தது.

கடந்த வாரத்தில், 20,000க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

இது ஏழு நாள் சராசரியாக கிட்டத்தட்ட 2,934 நாளாந்த தொற்றுக்களாகும்.

May மாதம் 3ஆம் திகதிக்கு பின்னரான அதிக தொற்றுகளின் எண்ணிக்கையாகும்.

Related posts

கனடாவின் முக்கிய பங்கு குறியீடு 300 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது

Lankathas Pathmanathan

கனடிய முத்திரைகளின் விலை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

20 முதல் 25 கனடியர்கள் காசாவை விட்டு வெளியேறினர்!

Lankathas Pathmanathan

Leave a Comment