44ஆவது கனேடிய பொது தேர்தல் பிரச்சாரத்தின் இரண்டாவது வாரம் Justin Trudeauவின் பிரச்சார கூட்டம் பாதுகாப்பு காரணங்களுக்காக இரத்து செய்யப்பட்ட நிலையில் நிறைவுக்கு வந்தது.வெள்ளிக்கிழமை (August 27) மாலை Justin Trudeau கலந்து கொள்ள இருந்த பிரச்சார பேரணி ஒன்றை Liberal கட்சி இரத்து செய்தது. COVID தொற்று கொள்கைகளை கண்டிக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் ஏற்பட்ட பாதுகாப்பு சவால்களை அடுத்து இந்த பேரணி இரத்து செய்யப்பட்டது.
இந்த நிகழ்வை முன்னெடுத்துச் செல்வது மக்களை ஆபத்தில் ஆழ்த்தி யிருக்கும் என Trudeau கூறியிருந்தார். Torontoவின் வடமேற்கில் உள்ள Bolton Ontarioவில் பல Liberal ஆதரவாளர்கள் சிறு குழந்தைகள் சகிதம் Trudeau வின் பேச்சைக் கேட்க கூடினர். பல போராட்டக்காரர்கள் பேரணியில் Liberal பிரச்சாரத்தை பின்தொடர்ந்தார்கள். அவர்கள் முன் காவல்துறையினர் வரிசையாக நிற்க கோசங்களை எழுப்பி, நடுவிரல்களை அசைத்து (waved theirmiddle fingers), Nazis பற்றிய குறிப்புகளை செய்தனர்.
இந்தப் பேரணி இரத்து செய்யப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அண்டை நகரமான
Bramptonனில்Trudeau உரையாற்றினார்.இரத்து செய்யப்பட்ட Bolton இந்த பிரச்சாரம் வருகை தரும் மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க முடியாத நிலையில் தன்னார்வலர் களையும் மற்றவர்களையும் ஆபத்தில் ஆழ்த்தியிருக்கும் என அவர் கூறினார்.
வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இதுபோன்ற மூன்றாவது சம்பவம் இதுவாகும். Trudeau கோபம டைந்த ஆர்ப்பாட்டக் காரர்களை எதிர்கொண்டார். தடுப்பூசி கடவுச்சீட்டு, பயணிகளுக்கான தடுப்பூசி ஆணைகளை எதிர்க்கும் குழுவி னரால் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆர்ப்பாட்டக்காரர்களினால் முன்னெடுக் கப்படும் இதுபோன்ற பாதுகாப்பு சவால்களை கடுமையான தொனியில் கண்டிக்க எதிர்க்கட்சிகள் பின்நிற்க வில்லை. Trudeauவின் பிரச்சாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் சிலர், ஆபாசமான மற்றும் தீவிரமான மொழி யைப் பயன்படுத்துவதை Conservative கட்சி ஒரு அறிக்கையில் கண்டனம் செய்தது.
பிரச்சாரத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என NDP தலைவர் Jagmeet Singhnகூறினார். தேர்தல் பிரச்சாரத்தின் இரண்டாவது வாரத்தில் இது ஒரு சங்கடமான முடிவாக இருந்தது. இரண்டாவது வாரத்தில் சுகாதார பிரச்சினைகளும், நாளுக்கு நாள் மாறும் ஆப்கானிஸ்தான் நிலைமையும் ஆதிக்கம் செலுத்தின. இரண்டாவது வாரத்தில் Liberal கட்சி COVID தொற்றுக்கு எதிரான தடுப்பூசியின் முக்கியத்துவத்தை வலியுறுத் தினர். Conservative கட்சி தீவிரமாக நோய்வாய்ப்பட் தொழிலாளர்களுக்கு நன்மைகளை மேம்படுத்துவதாக உறுதியளித்தனர். NDP உலகளாவிய மருந்தகத்திற்கான (universal pharmacare) ஒரு திட்டத்தை கோடிட்டுக் காட்டியது.
ராகவி புவிதாஸ்