தேசியம்
செய்திகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் அனைத்துலக நாளில் கனடாவில் நீதிக்கான நடைபயணம்!

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் அனைத்துலக நாளை முன்னிட்டு நீதிக்கான நடைபயணம் ஒன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

கனடா தமிழ் அமைப்புகளின் நீதிக்கான கூட்டமைப்பு இந்த நடை பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு Brampton நகரில் உள்ள Chinguacousy பூங்காவில் ஆரம்பிக்கும் இந்த நடைபயணம் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் அனைத்துலக நாளான திங்கட்கிழமை (August 30) மதியம் Ontario மாகாண சட்டசபை அமைந்துள்ள Queen’s Parkகை சென்றடையும்.

இலங்கைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்திக் கொண்டிருக்கும் தொடர் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக இந்த நடைபயணம் ஏற்பாடாகியுள்ளது.

Related posts

இளம் பெண்களை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டு 70 வயதான தமிழர் மீது பதிவு!

Gaya Raja

கனடிய செய்திகள் – October மாதம் 22 ஆம் திகதி வியாழக்கிழமை

Lankathas Pathmanathan

கனடாவில் முதலாவது உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய தினம்!

Gaya Raja

Leave a Comment