கனடாவில் தடுப்பூசி சான்று தேவைப்படும் இரண்டாவது மாகாணமாக British Colombia மாறியுள்ளது.
சில சமூக மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்களுக்கு தடுப்பூசி சான்று தேவை என British Colombia திங்கட்கிழமை அறிவித்தது.
September மாதம் 13ஆம் திகதி முதல் இந்த தடுப்பூசி சான்று தேவை அமுல்படுத்தப்படும் என முதல்வர் John Horgan கூறினார்.
September மாதம் 13ஆம் திகதி முதல் சில சமூக மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும்.
October மாதம் 24ஆம் திகதி முதல் முழுமையாக தடுப்பூசி பெற்று 14 நாட்களுக்கு பின்னரே சில சமூக மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை நான்காவது COVID அலையை கட்டுப்படுத்தும் நம்பிக்கையில், அடுத்த மாதம் முதல் சில அத்தியாவசியமற்ற வணிகங்களுக்கு தடுப்பூசி பெற்ற ஆதாரம் தேவைப்படும் என சுகாதார அதிகாரிகள் திங்களன்று அறிவித்தனர்.