தேசியம்
செய்திகள்

நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை மாத்திரம் 2,034 தொற்றுக்கள் பதிவு!

கனடாவில் COVID தொற்றுக்களின் எண்ணிக்கை மீண்டும் பெருமளவு அதிகரித்துள்ளது.

British Colombiaவில் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் திங்கட்கிழமை பிற்பகல் வரை 1,711 புதிய தொற்றுக்கள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாளாந்த தொற்றின் சராசரி 588ஆக பதிவாகியது.

வார இறுதியில் COVID காரணமாக 16 பேர் British Colombiaவில் இறந்துள்ளனர்.

இந்த நிலையில் நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை மாத்திரம் 2,034 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன .

Ontarioவில் திங்கட்கிழமை மாத்திரம் 639 புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன .

இதன் மூலம் நாளாந்த தொற்று எண்ணிக்கை நான்காவது நாளாக 600ஐ தாண்டியது.

ஆனால் Ontarioவில் திங்கட்கிழமை மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை.

June மாத ஆரம்பத்தின் பின்னர் Ontarioவில் ஞாயிற்றுக்கிழமை அதிக எண்ணிக்கையிலான தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை 722 புதிய தொற்றுக்களை பதிவு செய்தனர்.

தவிரவும் திங்கட்கிழமை Albertaவில் 473 தொற்றுக்கள், ஐந்து மரணங்கள், Quebecகில் 376 தொற்றுக்கள், ஒரு மரணம் என்று பதிவானது.

தவிரவும் திங்கட்கிழமை ஏனைய மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் தலா 100க்கும் குறைவான தொற்றுக்களே பதிவாகியுள்ளன.

Related posts

ஒரே நாளில் மீண்டும் 3,500க்கும் அதிகமான தொற்றுகள்!

Lankathas Pathmanathan

Torontoவில் முதலாவது monkeypox சந்தேக தொற்று குறித்த விசாரணை ஆரம்பம்

250 வாக்குகளினால் வெற்றியை தவற விட்ட தமிழர்!

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!