Ontario மீளத்திறக்கும் திட்டங்களை தற்காலிகமாக ஒத்தி வைக்கிறது. அதிக ஆபத்துள்ள பிரிவுகளுக்கான புதிய தடுப்பூசி கொள்கைகளை மாகாணம் வெளியிட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார பராமரிப்பாளர்களுக்கும் கல்வி தொழிலாளர்களுக்கும் கடுமையான COVID தடுப்பூசி கொள்கைகளை உருவாக்க Ontario அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அமைச்சரவை திங்கள் இரவு ஒப்புதல் அளித்த இந்த திட்டத்தை இன்று மாகாணத்தின் உயர் மருத்துவர் வெளியிட்டார்.
சுகாதார பராமரிப்பாளர்களுக்கும் கல்வி தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்சம், தொற்றுக்கு எதிரான முழு தடுப்பூசியின் சான்றை வழங்க வேண்டும் என செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
தவறுபவர்கள் தடுப்பூசி போடாததற்கு மருத்துவக் காரணத்தை வழங்க வேண்டும் அல்லது தடுப்பூசி கல்வி அமர்வில் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
இந்த புதிய தடுப்பூசி கொள்கைகள் September மாதம் 7ஆம் திகதிக்குள் செயல்படுத்தப்பட வேண்டும் என அரசாங்கம் கூறுகிறது.