தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் செவ்வாய்க்கிழமை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் Justin Trudeau தடுப்பூசி எதிர்ப்பாளர்களின் போராட்டங்களை எதிர்கொண்டார்.
செவ்வாய்க்கிழமை Liberal கட்சியின் தலைவர் Trudeau, தனது கட்சி வெற்றி பெற விரும்பும் Conservative கட்சியின் தொகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதன் போது தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
Auroraவில் ஒரு பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு வெளியேற முயன்ற Trudeau, குறைந்த எண்ணிக்கையிலான முகமூடி எதிர்ப்பு மற்றும் தடுப்பூசி எதிர்ப்பாளர்களை எதிர்கொண்டார். Trudeauவை அவரது பிரச்சாரப் பேருந்துக்கு நகர்த்த பாதுகாப்பு பிரிவினர் முயன்ற வேளை நிலைமை பதட்டமாகவும் ஆக்ரோஷமாகவும் மாறியது.
கட்டாய தடுப்பூசி குறித்த கோஷங்களை எதிர்கொண்ட Trudeau, போராட்டக்காரர்களை தடுப்பூசி பெறுமாறு வலியுறுத்தினார்.
இதுபோன்ற சம்பவம் திங்களன்று Cobourgகில் நிகழ்ந்தது.