தேசியம்
இலங்கதாஸ்பத்மநாதன்கனேடிய தேர்தல் 2021செய்திகள்

Trudeau: கரணம் தப்பினால் மரணம்!

இது Justin Trudeau (இலகுவாக) வெற்றிபெற வேண்டிய தேர்தல். பிரதமர் Justin Trudeau எதிர்பார்க்கும் பெரும்பான்மை, Liberal கட்சிக்கு எட்டக்கூடிய தூரத்தில் உள்ளது. ஆனால் NDPயின் தற்போதைய ஆதரவு நிலை அவர்களுக்கு ஒரு சவாலை ஏற்படுத்தக்கூடும்.

Trudeau முதன் முதலில் 2015 ஆம் ஆண்டில் பெரும்பான்மை அரசாங்கத்தை வென்றபோது
பிரதமரானார். ஆனால் 2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அவர் சிறுபான்மை அரசாங்கமாக குறைக்கப்பட்டார். மீண்டும் பெரும்பான்மை என்ற இலக்குடன் COVID தொற்றின் நான்காவது அலைக்குள் ஒரு தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.

பல மாத ஊகங்களுக்குப் பின்னர், பிரதமர் Trudeau ஒரு (தற்காலிகமான) பொன் முட்டையிடும் வாத்தை தேர்தல் பாதையில் தள்ள முடிவு செய்துள்ளார். இதுவரை அவர் COVID தொற்றைக் கையாண்ட விதம், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவதற்கு தேவையான வாக்காளர்களை வெல்லும் என பந்தயம் கட்டியுள்ளார்.

இது Trudeauவிற்கு கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைதான். ஒரு தேர்தல் பிரச்சாரம் பாதை தவறுவது எந்தக் கட்சிக்கும் நடக்கக்கூடியதுதான், இருந்தாலும், தற்போது உள்ள தரவுகளின்படி Trudeauவின் எதிர்பார்ப்பு நியாயமற்றது அல்ல என கூறுகிறது.

Liberal கட்சி ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து வாக்காளர் ஆதரவை தம்வசம் வைத்துள்ளதை கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. பெரும்பான்மையான நிறுவனங்களின் கருத்துக் கணிப்பில் பாதிக்கும் மேற்பட்ட கனேடிய வாக்காளர்கள் தொற்றை மத்திய அரசு கையாண்ட விதத்தை ஆதரிக்கின்றனர். குறிப்பாக பெரும் வாக்கு வங்கியாக நோக்கப்படும் Ontario, Quebec போன்ற மாகாணங்களில் Liberal கட்சிக்கான ஆதரவு பலமாக உள்ளது.

Liberal கட்சியின் தேர்தல் கணிப்பீட்டின் ஒரு பகுதி Conservative கட்சி தலைவர் Erin O’Toole
கொண்டுள்ள மோசமான ஆதரவுத் தளம் தொடர்பானதாக இருக்க வேண்டும். பல கருத்துக்
கணிப்புகளில் O’Toole குறைந்தபட்ச ஆதரவு கொண்ட தலைவராக உள்ளார்.

இருப்பினும், Trudeauவின் பெரும்பான்மைக்கான கனவுப் பாதை இடது பக்கத்திலிருந்து
தடுக்கப்படலாம். தேசிய அளவில் NDP 20 சதவிகித ஆதரவு தளத்தை நெருங்குவதால், கட்சி தனது பிரதிநிதித்துவத்தை குறைந்தபட்சம் பன்னிரண்டு இடங்களிலாவது அதிகரிக்க முடியும். இவற்றில் பலர் Ontario, British Columbia போன்ற மாகாணங்களில் இருந்து வரலாம். இந்த மாகாணங்களில் Liberal கட்சியின் பெரும்பான்மைக்கான பாதை தங்கியுள்ளது.

இத்தகைய ஆதரவுகளுடன், தற்போது Liberal கட்சி தன்வசம் கொண்டுள்ள பல நகர்ப்புற
தொகுதிகள் Jagmeet Singh தலைமையிலான NDP வேட்பாளர்களால் குறி வைக்கப்பட வேண்டும். இந்த ஆதரவை வாக்குகளாக மாற்றுவதில் NDP வெற்றி பெற்றால், பெரும்பான்மைக்கு 170 தொகுதிகள் என்ற வரம்பு Liberal கட்சிக்கு எட்டாக்கனியாகிவிடும்.

இது ஐந்து வாரங்களுக்கு பின்னர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நாடாளுமன்ற ஆசன பகிர்வு
எமக்குத் தரலாம்.

– இலங்கதாஸ் பத்மநாதன்-

Related posts

மீண்டும் வட்டி விகித அதிகரிப்பை அறிவிக்கவுள்ள மத்திய வங்கி!

Lankathas Pathmanathan

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி COVID தொற்றால் பாதிப்பு

Lankathas Pathmanathan

அமெரிக்க -கனடா எல்லையை மீண்டும் திறக்க கனடா விரைந்து செயல்படாது: பிரதமர்

Gaya Raja

Leave a Comment