தமது வேட்பாளர்கள் COVID தடுப்பூசி பெற்றுள்ளார்களா என்ற விபரத்தை வெளியிடப்போவதில்லை என கனடாவின் பிரதான இரண்டு கட்சிகளும் தெரிவித்துள்ளன.
Liberal மற்றும் Conservative கட்சிகள் தமது வேட்பாளர்களிடம் தடுப்பூசியை கட்டாயமாக்கியுள்ளதா அல்லது தடுப்பூசி பெற்றது குறித்து தமது வேட்பாளர்களிடம் கோரப்பட்டதா என்ற விபரத்தை வெளியிடப் போவதில்லை என தெரிவித்துள்ளன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு COVID தடுப்பூசிகளை கட்டாயமாக்குவதாக வெள்ளிக்கிழமை கனேடிய அரசாங்கம் அறிவித்தது.
ஆனால் தமது கட்சியின் வேட்பாளர்கள் தடுப்பூசி பெற்றுள்ளனரா என்ற கேள்விகளுக்கு Liberal கட்சி பதிலளிக்கவில்லை.
Conservative கட்சியும் தனது வேட்பாளர்களிடையே தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வது தேவையா அல்லது கண்காணிக்கிறதா என்ற விபரத்தை வெளியிடப் போவதில்லை என கனடாவின் பிரதான இரண்டு கட்சிகளும் தெரிவித்துள்ளன.
இதற்கு நேர்மாறாக, தமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளதாக NDPயின் பேச்சாளர் கூறியுள்ளார்.
Bloc Québécoisயின் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து வேட்பாளர்களும் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளதாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
தனது வேட்பாளர்கள் தடுப்பூசி பெற்ற விவரங்களை கோரவில்லை என கனடாவின் பசுமை கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறினார்.
கனேடிய பொது தேர்தல் September 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் Justin Trudeau ஆரம்பிக்கவுள்ளார்.