தேசியம்
செய்திகள்

கனடா மீது சீனா குற்றச்சாட்டு!

கனடா தம்மீது தேவையற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.

சீனாவின் வெளியுறவு அமைச்சகமும் கனடாவில் உள்ள சீனத் தூதரகமும் வியாழக்கிழமை இந்த குற்றச்சாட்டை முன்வைத்தன.

கனேடியர்களுக்கு சீனாவின் நீதிமன்றங்கள் வழங்கிய கடுமையான தண்டனைகளுக்காக கனடாவின் எதிர்ப்புகளை சீனா நிராகரித்தது.

இந்த தண்டனைகள் சீனத் தொழில்நுட்ப நிறுவனமான Huawei நிறுவனத்தின் உயர் அதிகாரியின் Vancouver
கைதுடன் தொடர்புடையதான குற்றச்சாட்டுகளையும் சீனா மறுக்கிறது.

இத்தகைய குற்றச்சாட்டுகள் மிகவும் நியாயமற்றவை, மிகவும் அபத்தமானவை, மிகவும் திமிர்பிடித்தவை எனக் கூறும் சீனா, அவை குறித்த மிகுந்த கோபத்தையும், கடும் கண்டனத்தையும் தெரிவிக்கிறோம் என கூறியுள்ளது.

கனேடியர் Michael Spavorருக்கு சீன நீதிமன்றம் புதன்கிழமை11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இந்தத் தீர்ப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என கனேடிய பிரதமர் Justin Trudeau விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

Related posts

எதிர்வரும் புதன்கிழமை Manitoba மாகாண முதல்வர் பதவி விலகுகிறார்!

Gaya Raja

B.C. காட்டுத்தீயை எதிர்த்து போரிட இதுவரை $100 மில்லியன் டொலர் செலவு

Lankathas Pathmanathan

விடுமுறை கால சுகாதார ஆலோசனையை வெளியிட்ட தலைமை சுகாதார அதிகாரி

Lankathas Pathmanathan

Leave a Comment