சர்வதேச பயணத்திற்கான தடுப்பூசி கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தவுள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்தது.
குடிவரவு அமைச்சர் Marco Mendicino புதன்கிழமை இந்தத் தகவலை வெளியிட்டார்.
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கனேடியர்கள் சர்வதேச பயணத்தின் நோக்கத்திற்காக தடுப்பூசி பெற்றதை சான்றளிக்கும் அரசாங்க ஆவணத்தை விரைவில் பெற முடியும் என அமைச்சர் கூறினார்.
இந்த ஆவணம் இலையுதிர்காலத்தில் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது உள்நாட்டு பயன்பாட்டிற்கு அல்ல என கூறப்பட்டாலும் மாகாணங்கள் விரும்பினால் இந்த ஆவணத்தை உபயோகிக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.