தேசியம்
செய்திகள்

கனடாவில் Moderna mRNA தடுப்பூசி உற்பத்திக்கான உடன்பாடு!

COVID mRNA தடுப்பூசியின் உற்பத்தியை Moderna கனடாவில் ஆரம்பிக்கவுள்ளது.

இதற்கான உற்பத்தி தொழிற்சாலையை கனடாவில் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கனேடிய அரசாங்கத்துடன் Moderna கையெழுத்திட்டுள்ளது.

COVID உள்ளிட்ட சுவாச தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பூசிகளின் விநியோகத்தை அதிகரிக்க விரும்புவதால், mRNA தடுப்பூசிகளின் உள்நாட்டு உற்பத்தியை ஆரம்பிக்க கனேடிய அரசாங்கத்துடன் ஒப்புக் கொண்டதாக Moderna தெரிவித்துள்ளது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், கனடாவில் ஒரு mRNA தடுப்பூசி உற்பத்தித் தொழிற்சாலையை நிறுவுவதோடு அதன் மேம்பாட்டு இயந்திரத்தை செயல்படுத்தவும் முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

mRNA தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட Modernaவின் COVID தடுப்பூசி ஏற்கனவே கனடா தவிர அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இரண்டு தொகுதி இடைத் தேர்தலில் Liberal வெற்றி

Lankathas Pathmanathan

குடியிருப்புப் பாடசாலைகளின் கொடூரங்களுக்கு கத்தோலிக்க தேவாலயத்தின் ஒரு முக்கிய கனேடியப் பிரிவு மன்னிப்பு கோரியது!

Gaya Raja

ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்த கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment