சுகாதாரப் பணியாளர்களுக்கு COVID தடுப்பூசிகளை கட்டாயமாக்கும் கோரிக்கைகள் வெளியாகியுள்ளன.
கனேடிய மருத்துவ சங்கம், கனேடிய செவிலியர் சங்கம் ஆகியவை இந்த கோரிக்கையை இணைந்து விடுத்துள்ளன. சுகாதாரப் பணியாளர்களுக்கான கட்டாய தடுப்பூசி அனைவரையும் பாதுகாப்பதற்கான கூடுதல் நடவடிக்கையாகும் என மருத்துவ சங்கமும் செவிலியர் சங்கமும் ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்தது.
தடுப்பூசி பெறுவதற்கான தடைகளைக் குறைப்பதற்கான உத்திகளைச் செயல்படுத்துமாறு அனைத்து மட்ட அரசாங்களையும் இந்த அமைப்புகள் அழைத்துள்ளன.
இதுவரை சுகாதாரப் பணியாளர்களில் எத்தனை பேர் தடுப்பூசியை பெற்றுள்ளனர் என்ற தரவுகள் எதுவும் வெளியாகவில்லை.