தேசியம்
செய்திகள்

Ontarioவில் அதிகரிக்குமா தொற்றுக்கள்!

வெள்ளிக்கிழமை Ontarioவில் மீண்டும் 200க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகின.
மாகாணத்தை மீண்டும் திறந்து இரண்டு வாரங்களுக்குப் பின்னர் வெள்ளிக்கிழமை தொடர்ந்தும் இரண்டாவது நாளாக 200க்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவாகின.

மாகாண சுகாதார அதிகாரிகள் 226 புதிய தொற்றுக்களையும் மேலும் 11 மரணங்களையும் வெள்ளிக்கிழமை பதிவு செய்தனர்

வியாழக்கிழமை Ontarioவில் 218 புதிய தொற்றுக்கள் பதிவாகின. இவை July மாதம் 6ஆம் திகதிக்கு பின்னரான அதிக எண்ணிக்கையிலான தொற்றுகளாகும் .

வெள்ளிக்கிழமை வெளியான தொற்றுகளின் எண்ணிக்கை புதிய தினசரி தொற்றுகளின் ஏழு நாள் சராசரியை 170 ஆக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் தொடர்ச்சியாக நான்காவது நாளாக தொற்றுகளின் ஏழு நாட்கள் சராசரி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Related posts

Ontarioவில் 52 திருடப்பட்ட வாகனங்கள் மீட்பு

Lankathas Pathmanathan

புதிய குடிவரவாளர்கள் மரணத்தில் இரண்டு பேர் மீது குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

வதிவிட பாடசாலைகளில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தீங்குகளை போப் ஆண்டவர் ஏற்றுக்கொண்டார்

Lankathas Pathmanathan

Leave a Comment