தேசியம்
செய்திகள்

British Columbiaவில் தொடரும் காட்டுத்தீ அபாயம் – அவசரகால நிலை அறிவிப்பு

கனடாவின் ஏழு மாகாணங்கள் மற்றும் ஒரு பிரதேசத்தின் பகுதிகள் செவ்வாய்கிழமை காலை காற்றின் தர எச்சரிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டன.

நூற்றுக்கணக்கான காட்டுத்தீயில் இருந்து புகை காரணமாக மங்கலான நிலைமைகளையும் சுகாதார அபாயங்களையும் ஏற்படுத்திய காரணத்தால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

செவ்வாய் காலை சுற்றுச்சூழல் கனடா Edmonton, Winnipeg, Toronto மற்று Ottawa உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும், New Brunswick மாகாணத்திற்கும் வானிலை ஆலோசனைகளை வெளியிட்டது

Montreal மற்றும் Quebec City உள்ளிட்ட தெற்கு Quebecகின் பெரும்பகுதி ஒரு வலுவான புகை எச்சரிக்கைக்கு உள்ளாகியது.

சுற்றுச்சூழல் கனடாவின் எச்சரிக்கைகள் British Colombiaவின் உள்துறை மற்றும் வடகிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு Alberta, கிழக்கு மற்றும் வடக்கு Saskatchewan, Ontarioவின் வடமேற்கு, தெற்கு Ontario, தெற்கு Quebecகின் பெரும்பகுதி, New Brunswick மற்றும் வடமேற்கு பிராந்தியங்களில் உள்ள Thebacha பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியது.

செவ்வாய்கிழமை மிக மோசமான காற்றின் தரம் சுழல் காற்றின் தர சுகாதார குறியீட்டின் அடிப்படையில் Winnipegகில் இருப்பதாக கூறப்பட்டது.

Edmonton, Regina, Montreal மற்றும்Quebec City ஆகியவற்றில் செவ்வாய் காலை அதிக ஆபத்துள்ள காற்றின் தர நிலைகள் பதிவாகியுள்ளன.

British Columbiaவில் செவ்வாய் காலை நிலவரப்படி சுமார் 300 காட்டுத்தீ பதிவானது. British Columbiaவில் ஏற்பட்ட காட்டுத்தீ வெளியேற்ற உத்தரவுகளுக்கும் உள்ளூர் அவசர நிலைக்கும் வழிவகுத்துள்ளது

Albertaவில் திங்கள் நிலவரப்படி 68 காட்டுத்தீ பதிவானது. செவ்வாய் நிலவரப்படி 171 காட்டுத்தீ Saskatchewanனில் பதிவானது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி Manitoba வில் 130 காட்டுத்தீ பதிவானது. 121 காட்டுத்தீ Ontarioவில் திங்கள் நிலவரப்படி பதிவானது.

Related posts

ருவாண்டாவில் தூதரகம் ஒன்றை திறக்கும் கனடா

Lankathas Pathmanathan

உலகில் வாழத் தகுதியான பத்து நகரங்களின் மூன்று கனேடிய நகரங்கள்

Lankathas Pathmanathan

கனடாவிற்கு Omicron மாறுபாட்டை இலக்காகக் கொண்ட 12 மில்லியன் COVID தடுப்பூசிகளை வழங்கும் Moderna

Lankathas Pathmanathan

Leave a Comment