அமெரிக்கா தனது எல்லை கட்டுப்பாடுகளை எவ்வாறு தளர்த்துகிறது என்பதை பற்றி கனடா ஆணையிடாது என கனேடிய பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.
August 9ஆம் திகதி முதல், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்க பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கும் என கனேடிய மத்திய அரசு திங்களன்று அறிவித்தது.
இந்த நிலையில் கனேடியர்களுக்கு தனது எல்லையை மீண்டும் திறக்க அமெரிக்கா எப்படி, எப்போது முடிவு செய்கிறது என்பது குறித்து கனடாவுக்கு தெரியவில்லை என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.
ஒவ்வொரு நாடும் அதன் சொந்த எல்லைக் கொள்கைகளை அமைக்க வேண்டும் என பிரதமர் கூறினார். முடிந்தவரை எங்கள் தேர்வுகள் சீரமைக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் எனவும் Trudeau தெரிவித்தார்.
தொற்றின் ஆரம்பத்தில் நாடுகள் வெவ்வேறு அணுகுமுறைகளை எடுத்ததை அனைவரும் அறிந்திருந்தார்கள் எனவும் பிரதமர் Justin Trudeau கூறினார்.