கனடா அமெரிக்கா எல்லையை மீண்டும் திறக்க அமெரிக்காவின் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து விரக்தி அடைந்த சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டணி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. இந்த கூட்டணி அமெரிக்க வெள்ளை மாளிகைக்கும் கனடாவின் மத்திய அரசிடமும் எல்லையை மீண்டும் திறக்க வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு எல்லையை மீண்டும் திறக்குமாறு இவர்கள் கோரியுள்ளனர்.
அமெரிக்கா மாநில அரசுகள் சபையின் ஒரு பகுதியான மத்திய மேற்கு சட்டமன்ற மாநாடு புதன்கிழமை அதன் வருடாந்த கூட்டத்தில் எல்லை திறப்பு குறித்த முறையான தீர்மானத்தை நிறைவேற்றியது. இரண்டு நாடுகளின் மத்திய அரசாங்கங்களும் இந்த விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது
COVID தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் கனடா-அமெரிக்க எல்லை கடந்த ஆண்டு March மாதம் முதல் அத்தியாவசியம் மற்றும் வர்த்தகம் தவிர அனைத்து பயணிகளுக்கும் மூடப்பட்டுள்ளது.