பிரான்ஸ் நாட்டவர்களுக்கு கனேடிய எல்லையை விரைவில் திறக்க வேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.
கனேடிய சுற்றுலாப் பயணிகளுக்கு தனது எல்லைகளை திறந்த பிரான்ஸ், கனடா மீண்டும் பிரான்ஸ் நாட்டவர்களுக்கு திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. கனேடிய எல்லை ஒரு சில விதி விலக்குகளுடன் வெளிநாட்டினருக்கு குறைந்தது எதிர்வரும் 21ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் March மாதம் முதல் கனேடிய அரசாங்கம் வெளிநாட்டினருக்கு மாதந்தோறும் எல்லை மூடலை நீட்டித்துள்ளது. Ottawaவில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தில் பிரான்ஸ் அரசாங்கத்தின் பிரதிநிதி கனேடிய எல்லையை விரைவில் பிரான்ஸ் நாட்டவர்களுக்கு மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இல்லையெனில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்படும் என கனடாவுக்கான பிரான்ஸ் தூதர் Kareen Rispal எச்சரித்தார்.