பிரதமர் Justin Trudeau புதன்கிழமை Alberta மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது அவர் Alberta மாகாண முதல்வர், Calgary நகர முதல்வர் ஆகியோரையும் சந்தித்தார். Alberta முதல்வர் Jason Kenney, Calgary நகர முதல்வர் Naheed Nenshi ஆகியோரை பிரதமர் புதன்கிழமை காலை சந்தித்தார்.
உள்ளூர் சுற்றுலா மற்றும் பயண துறைகளின் தற்போதைய அவல நிலை குறித்து இந்த சந்திப்புகளில் விவாதிக்கப்பட்டது. Albertaவின் பொது சுகாதாரத்தில் கவனம் செலுத்துவதற்கான அரசாங்கத்தின் பல்வேறு நிலைகளை முதல்வர் Kenney இந்த சந்திப்பில் பாராட்டினார்.