அமெரிக்காவின் Floridaவில் இடிந்து விழுந்த தொடர் மாடிக் கட்டட இடிபாடுகளுக்குள் இரண்டு கனேடியர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கனேடியர்கள் இருவரின் சடலங்கள் தொடர் மாடிக் கட்டடம் அமைந்திருந்த இடத்தில் இருந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இதை கனேடிய வெளிவிவகார அமைச்சகம் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது.
தனியுரிமைச் சட்டம் காரணமாக, இறந்த கனேடியர்கள் குறித்த விவரங்களை அரசாங்கம் வெளியிடவில்லை. ஆனாலும் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர்கள் 68 வயதான Tzvi Ainsworth, அவரது மனைவி 66 வயதான Ingrid Ainsworth என குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் குறிப்பிட்ட தொடர் மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் மேலும் மூன்று கனேடியர்கள் காணாமல் போனவர்களாக தேடப்படுகின்றனர்.