British Colombia மாகாணத்தின் உட்புறத்தில் உள்ள முதற்குடியினரின் முன்னாள் வதிவிடப் பாடசாலைக்கு அருகில் நில குறிப்புகள் ஏதுமற்ற 182 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
British Colombiaவின் Cranbrook என்ற நகரத்திற்கு அருகில் அமைந்திருந்த முன்னாள் வதிவிடப் பாடசாலைக்கு அருகில் இந்த கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Lower Kootenay Band இந்த அறிவித்தலை வெளியிட்டது.
தரையை ஊடுருவும் radar கொண்டு நிகழ்த்தப்பட்ட ஒரு ஆய்வில் இந்த கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. 2020 ஆம் ஆண்டில் Aq’am சமூகம் இந்த தேடலை நடத்தியதாக கூறப்படுகின்றது. 1912 முதல் 1970 வரை இந்த வதிவிட பாடசாலை இயங்கியுள்ளது.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் British Colombiaவின் Kamloops நகரில் அமைந்திருந்த முன்னாள் வதிவிடப் பாடசாலையின் புதைகுழியில் இருந்து 215 குழந்தைகளின் எலும்புக்கூடு எச்சங்களும், சில வாரங்களுக்கு பின்னர் Saskatchewanவின் முன்னாள் வதிவிடப் பாடசாலையின் புதைகுழியில் இருந்து 751 குழந்தைகளின் எலும்புக்கூடு எச்சங்களும் கண்டு பிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.